ஒரு தாயாக,
பாட்டியாக,
ஆசிரியராக,
சகோதரியாக,
மனைவியாக,
மாமியாராக,
மகளாக,
மரு'மகளாக'
தோழியாக,
குடும்ப உறவினர்களாக,
இச்சமூகத்தில் நாம் சந்தித்தவர்களாக........
பெண்ணினம் ஆண்களுக்கு செய்த
உதவிகள் தான் எத்தனை... எத்தனை ...
கருவிலே சுமந்து, பணிவிடைகள் செய்து,
உணவு கொடுத்து உடல் வளர்த்து,
கற்றுக்கொடுத்து அறிவு வளர்த்து ,
அன்பு காட்டி, ஆறுதல் சொல்லி ,
பாசம் காட்டி பக்குவப்படுத்தி,
விண்ணுக்கு செல்லும் வரை
தன்னையே கொடுத்து
இப்பரந்த உலகில் பார்போற்ற உயர வைத்து
அழகு பார்க்கும் தியாகத்தின் பிறப்பிடமே,
அன்பின் இலக்கணமே, பாசத்தின் பயிலகமே,
அறிவின் ஊற்றே ,
மொத்தத்தில் இறைவனின் இருப்பிடமே
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும்
பின்னால் இருக்கும் பெருமைக்குரிய பெண்ணினமே
உன்னை வணங்குகிறேன்🙏
வாழ்த்துகிறேன்🙌
போற்றுகிறேன்
போற்றி பாதுகாக்க என்றும் உறுதிகொள்வேன்.
இறைவா நீ ஒவ்வொரு மனிதனுக்கும் நேரில் சென்று எல்லா நிலைகளிலும் உதவிகள் செய்யமுடியாது
என எண்ணித்தான் பெண்களை படைத்தாயோ...
நன்றி🙏நன்றி 🙏நன்றி🙏 பெண்களை போற்றி, மதித்து,
அன்புகாட்டி, பாசம் காட்டி, உணர்வுகளை மதித்து, கல்வியில் உயர்த்தி, தீங்குகள் ஏதும் செய்யாமல், சம உரிமை அளித்து பாதுகாப்போம். பெண்களின் உயர்வே தேசத்தின் உயர்வு.
அன்பிற்கினிய அனைத்து மாதர்களுக்கும் என்னுடைய "சர்வதேச பெண்கள் தின நல்வாழ்த்துகள்"
Credit: WhatsApp